மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம் !

06 Dec, 2025 | 08:15 PM
image

டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid – SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) இணைந்து குடிநீர், சுகாதாரம், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலைமையறிக்கை, அவசர தேவைகள் மதிப்பீடு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. 

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவும் சுவிற்சர்லாந்து நாட்டின் இந்த அதிவேக பதிலளிப்பு குழு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (SDC) மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56