உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

06 Dec, 2025 | 04:32 PM
image

எம்மில் பெரும்பாலானவர்கள் முருக பக்தர்களாகவோ சிவ பக்தர்களாகவோ தான் இருக்கிறார்கள். வேறு சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்குகிறார்கள். அத்துடன் எம்மில் உள்ள சிலர் காளி, பிரத்யங்கிரா தேவி, வாராகி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உக்கிரமான தெய்வங்களை வணங்குகிறார்கள். இதுபோன்ற உக்கிரமான தெய்வங்களை வணங்கும் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

இதை அறிந்து கொண்ட பலரும் தாங்களும் உக்கிரமான தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபட தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உக்கிர தெய்வ வழிபாட்டின் பின்னணியில் உள்ள சூட்சமத்தை விவரிக்கிறார்கள். அதாவது உக்ர தெய்வத்தை யார் வழிபட வேண்டும்? என்பதற்கான குறிப்புகளையும் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் என குறிப்பிடப்படும் சனி-  செவ்வாய்-  ராகு - கேது - ஆகிய கிரகங்கள் தனித்து இருந்தாலும் அல்லது வேறு கிரகங்களுடன் இணைவு பெற்றிருந்தாலும் நீங்கள் உக்ர தெய்வத்தை வழிபடலாம். உங்களுக்கு உக்கிர தெய்வங்களான காளி- துர்க்கை- பிரத்யங்கிரா தேவி - வாராகி- ஆஞ்சநேயர் - ஐயப்பன் - ஆகியோர் அருள் கடாட்சம் வழங்குவார்கள். இவர்களை தொடர்ந்து வணங்கினால் வாழ்க்கையில் வெற்றியைப் பெறலாம்.

இவர்களை தவிர்த்து சூரியனும்,  சனியும் இணைவு பெற்றிருப்பவர்களும் உக்கிர தெய்வ வழிபாடு உரிய பலனை அள்ளி அள்ளி வழங்கும்.  இவர்களை தவிர்த்து வேறு யாரும் உக்ர தெய்வத்தை வழிபடுவதால்.. எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இவர்கள் சாந்தஸ்வரூபம் கொண்ட வேறு ஏதேனும் பெண் தெய்வத்தை வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்காத காணியை விற்பனை செய்வதற்கான சூட்சும...

2026-01-12 15:53:56
news-image

குலதெய்வத்தின் அருளை எளிதாக பெறுவது எப்படி...?

2026-01-10 17:59:12
news-image

தன வரவு தொடர்ந்து அதிகரிக்க....!!?

2026-01-09 17:38:45
news-image

சூரிய பகவானின் அருள் கிடைப்பதற்கான சூட்சம...

2026-01-08 15:21:13
news-image

விரக்தி நிலையில் இருந்து விடுபடுவதற்கான பிரத்யேக...

2026-01-07 16:41:49
news-image

சித்தர்கள் ‘உயிர்’ன்னு சொன்னதை நாம ‘மூச்சு’ன்னு...

2026-01-06 17:18:11
news-image

கடன் சுமை குறைவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-01-05 17:00:09
news-image

பித்ருக்களின் சாபத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-01-03 16:03:58
news-image

தங்கம் தங்குவதற்கான சில சூட்சம குறிப்புகள்..!?

2026-01-02 15:52:58
news-image

இந்த புத்தாண்டிற்கான பிரத்யேக வழிபாடு

2026-01-01 16:02:44
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான மந்திர வழிபாடு..!?

2025-12-31 17:22:30
news-image

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026

2025-12-30 18:27:23