தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்த ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தள குழுவினர்

06 Dec, 2025 | 04:07 PM
image

ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம் தென்னிந்திய ரசிகர்களுக்காக எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று முன்னெடுக்கும் பிரத்யேக நிகழ்வு குறித்து இந்த டிஜிட்டல் தளத்தின் தென்னிந்திய பிரதிநிதிகள் குழுவினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து விவரித்தனர்.

மில்லியன் கணக்கிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முன்னணி டிஜிட்டல் தனமான ஜியோ ஹாட்ஸ்டார் தங்களுடைய சந்தாதாரர்களுக்காக 'ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட்' எனும் நிகழ்வினை நடத்துகிறது. எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்வினை தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலங்களவை  உறுப்பினரான பத்மபூஷண் கமல்ஹாசன் சிறப்பு அதிதியாக பங்குபற்றுகிறார். இவர்களுடன் தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆளுமைகள் பலரும் பங்குபற்றுகிறார்கள்.

தென்னிந்திய கலை, கலாச்சாரம் மற்றும் கதை சொல்லல் தொடர்பான மரபார்ந்த தாக்கத்தினை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்காக நடைபெறும் இந்த நிகழ்வை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது.‌ இது தொடர்பான விளக்கங்களையும், இந்நிகழ்வின் நோக்கங்களையும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்தித்து விவரித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டுகால...

2026-09-16 15:31:09
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05