விமானியின் உயிர்த்தியாகத்திலும் விமானப்படையின் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

06 Dec, 2025 | 01:05 PM
image

நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பேரிடர் சூழ்நிலையில் மக்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றிய விமானப்படை வீரர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய ஹெக்கொப்டர் விபத்தில் உயிரிழந்தமை நாடு முழுவதும் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. 

இந்த துயரச் செய்தியை அடுத்தும், இலங்கை விமானப்படை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இடையறாது மேற்கொண்டு வருகிறது. ஹெலிக்கொப்டர்கள், Y-12 போக்குவரத்து விமானங்கள், பீச் க்ராஃப்ட் கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளிலிருந்து கிடைக்க பெற்ற ஹெலிக்கொப்டர்களும் இந்த பணிகளில் இணைக்கப்பட்டன.

இதுவரை 250க்கும் மேற்பட்ட விமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகள், பிறந்த குழந்தைகள், வெளிநாட்டுப் பிரஜைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 601 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாவிலாறு, மஹவெல்ல, கலாவெவ, பொலன்னறுவை, மனம்பிட்டிய, கலாஓயா, அநுராதபுரம், நிக்கவரெட்டிய, மல்வத்துஓயா, தோப்பூர், ராஜாங்கனை, சிலாபம், அரநாயக்க, பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மக்கள் விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் சோமாவதியா, வவுனியா, வலப்பனை, கம்பஹா, நக்கிள்ஸ், கொத்மலை, மூதூர் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளனர்.

இதுவரை 135,718 கிலோகிராம் (135.7 தொன்) உணவு, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும், 2,226 விமானப்படை வீரர்கள் நில அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் நில மீட்புப் பணிகளின் மூலம் 1,949 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் ஜா-எலா, சீதுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 30 விமானப்படை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

டித்வா புயல் காரணமாக உருவான இந்த பேரழிவிலிருந்து மக்களை மீட்கவும், அவசர தேவைகளை பூர்த்தி செய்யவும் இலங்கை விமானப்படை மேற்கொண்டு வரும் பணி நாடு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38