14 மது போத்தல்களை குடித்து போதையில் மயங்கிக் கிடந்த ரக்கூன்..!

06 Dec, 2025 | 10:15 AM
image

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டதும், இரவில் சுறுசுறுப்பாக திரிவதுமான ஓர் விலங்கினம் ரக்கூன் (Raccoon) எனப்படும் அணில் கரடி ஆகும்.

சுமார் 42-71 சென்னிமீற்றர் நீளமும், 22.8-30.4 சென்னி மீற்றர் உயரமும், 3.8-9.0 கிலோகிராம் எடையும் கொண்ட இவைகள், மரங்களில் ஏறுவதிலும், நீந்துவதிலும் திறமையானவை.

பெரும்பாலும் இரவில் உணவு தேடி அலையும் இவைகள், மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், நகரங்களிலும் எளிதாக காணப்படும்.

இவை அனைத்துண்ணிகள் (omnivores), பழங்கள், நட்ஸ், பூச்சிகள், சிறிய விலங்குகள், குப்பைகளில் உள்ள உணவுகள் என பலவற்றையும் உண்ணும்.

இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள மதுக்கடை ஒன்றில் கூரை வழியாக நுழைந்த ரக்கூன் ஒன்று, அங்கிருந்த 14 போத்தல்களை கீழே தள்ளி விட்டது.

அத்துடன், போத்தல்கள் உடைந்து தரையில் ஓடிய மதுவை குடித்துள்ளது. இதனால் போதை தலைக்கேறிய ரக்கூன், தள்ளாடியபடியே சென்று அங்கிருந்த கழிவறையில் படுத்து தூங்கியது.

மறுநாள் காலை கடையை திறந்த ஊழியர்கள், மது போத்தல்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து, திருடர்கள் தான் உள்ளே நுழைந்து விட்டனரோ என நினைத்து தேடியுள்ளனர்.

இறுதியில், கழிவறையில் படுத்து கிடந்த ரக்கூனைப் பார்த்து நிம்மதி அடைந்த அவர்கள், அதைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39