இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அவுஸ்திரேலியா துணிச்சலான பதில்

05 Dec, 2025 | 11:21 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 334 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவுஸ்திரேலியா சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவருமே திறமையை வெளிப்படுத்தியதுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்கள் குவித்தனர்.

அத்துடன் முதல் நான்கு விக்கெட்களில் பதிவான 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை பலப்படுத்தின.

ட்ரவிஸ் ஹெட் (33), ஜேக் வெதரோல்ட் ஆகிய இருவரும் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜேக் வெதரோல்ட் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் மானுஸ் லபுஷேன் (65), ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதனை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் (61), கெமரன் க்றீன் (45) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 113 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

ஜோ ரூட்டும் இழந்த ஜொவ்ரா ஆச்சரும் கடைசி விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜொவ்ரா ஆச்சர் 38 ஓட்டங்ளைப் பெற்றதுடன் ஜோ ரூட் 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52