கேகாலை, அவிஸ்ஸாவளை வீதியில் பிந்தெனிய, பிட்டகல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for கோர விபத்து

மோட்டார் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குருகொட ஓயாவில் விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 57 வயதுடைய காரின் சாரதி மற்றும் 31 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.