மைக்ரோஷியா எனும் பிறவி குறைபாட்டிற்குரிய பிரத்யேக சத்திர சிகிச்சை

05 Dec, 2025 | 06:49 PM
image

உலக அளவில் பிறக்கும் பன்னிரண்டாயிரம் பிள்ளைகளில் ஒருவருக்கு காது எனும் உறுப்பு சார்ந்த பிறவி குறைபாடு ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் தோராயமாக ஒரு மில்லியன் பிள்ளைகள் இத்தகைய குறைபாடு உடன் இருக்கிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சை பலன் அளித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மைக்ரோஷியா என்பது பிறக்கும் பிள்ளைகளின் கேட்கும் திறன் கொண்ட உறுப்பாக திகழும் காது எனும் உறுப்பு - பிறவி குறைபாடு உடன் இருப்பதை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இதில் சில பிள்ளைகளுக்கு காது வளர்ச்சி அடையாத நிலையிலும், சில பிள்ளைகளுக்கு காதின் வளர்ச்சியில் பாரிய குறைபாடு உடனும், சில பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஒரு காதிலும், சில பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு இரண்டு காதுகளிலும் ஏற்படக்கூடும்.‌

மரபணு குறைபாடு இதற்கான காரணம் என அவதானிக்கப்பட்டாலும்.. சிலருக்கு கருவுற்றிருக்கும் தருணங்களில் பாவிக்கும் சில மருந்து - மாத்திரையின் பக்க விளைவு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மைக்ரோஷியா என மருத்துவ மொழியில்  குறிப்பிடப்படும் இத்தகைய பாதிப்பு நான்கு வகையினதாக வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய தருணங்களில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு காதிற்கான மறு சீரமைப்பு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய தருணங்களில் பிள்ளைகளின் விலா எலும்பு பகுதியில் அமையப்பெற்றுள்ள குருத்தெலும்பிலிருந்து சிறிதளவு அகற்றி, அதனை காது வடிவில் செதுக்கி பொருத்துகிறார்கள். பலருக்கு இத்தகைய சத்திர சிகிச்சை இரண்டு முதல் நான்கு அமர்வுகளாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அனுபவமும் , திறமையும் வாய்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவசியம். இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானித்து, உரிய தருணத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளாவிடில்.. அந்த பிள்ளைக்கு கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். அவருடைய தோற்றத்தில் சீரற்ற தன்மை ஏற்படலாம். இதனால் அவர்களுடைய மனித வளம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன் காரணமாக காது பகுதியில் ஏதேனும் பிறவி குறைபாடு ஏற்பட்டிருந்தால் ... அதனை சீரமைப்பதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

வைத்தியர் சிவக்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திரவ வடிவிலான திசு பரிசோதனை யாருக்கு,...

2026-01-12 15:19:54
news-image

உள்நோக்கி வளரும் கால் நக பாதிப்பிற்கான...

2026-01-10 17:54:40
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-01-09 17:15:47
news-image

கருத்தரித்த பெண்களுக்கு டபுள்மார்க்கர் பரிசோதனை அவசியமா..?

2026-01-08 15:08:20
news-image

தொடர் இரத்த சர்க்கரை அளவை அவதானிக்கும்...

2026-01-07 16:48:36
news-image

பைலோனெஃப்ரிடிஸ் எனும் சிறுநீரக தொற்று பாதிப்பிற்குரிய...

2026-01-06 17:26:14
news-image

ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பிற்கான...

2026-01-05 17:03:48
news-image

மூளையில் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-01-03 16:06:53
news-image

சிறார்களுக்கு ஏற்படும் குருதி தொடர்பான பாதிப்பிற்குரிய...

2026-01-02 16:17:48
news-image

ஈசினோஃபிலீக் கிரானுலோமடோசிஸ் வித் பொலி ஒஞ்சியைடீஸ்...

2026-01-01 16:26:27
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பை அவதானிப்பது...

2025-12-31 17:15:49
news-image

ரீகர்ஜிடேசன் எனும் இதயத்தில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-12-30 17:57:43