எம்மில் பலரும் நாளாந்தம் இறைவழிபாட்டை மேற்கொள்வார்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மட்டுமே பிரத்யேகமாக தொடர்வார்கள். வேறு சிலர் இஷ்ட தெய்வத்தை வழிபட தொடங்குவார்கள். ஆனால் பலருக்கு இறைவழிபாட்டை மேற்கொண்டாலும்.... நவகிரக வழிபாட்டை மேற்கொண்டாலும்... நினைத்த தருணத்தில் உரிய பலன் கிடைக்கவில்லையே..!? என மனதிற்குள் கவலை உண்டாகும். இந்த தருணத்தில் நீங்கள் இந்த பிறவியில் ஆயுள் முழுவதும் வணங்க வேண்டிய இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொண்டு, அதனை வழிபடத் தொடங்கினால்... சிறப்பான பலனை பெறலாம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உடனே எம்மில் பலரும் எம்முடைய இஷ்ட தெய்வத்தை எப்படி கண்டறிவது? என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கான குறிப்பையும் எம்முடைய சோதிட நிபுணர்கள் அளித்திருக்கிறார்கள்.
உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டின் கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் அமைந்திருக்கிறதோ... அந்த நட்சத்திர அதிபதியின் தெய்வம் தான் உங்களுடைய இஷ்ட தெய்வம். இதனை எளிய உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்றால்... லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீடு துலாம். துலாம் வீட்டின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் உங்களுடைய ஜாதகத்தில் சதயம் நட்சத்திரத்தில் பாத சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார் என்றால்... உங்களுடைய இஷ்ட தெய்வம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதியான ராகுவின் தெய்வமாகும். ராகுவின் தெய்வங்களாக குறிப்பிடப்படுவது காளி - துர்க்கை - பிரத்யங்கிரா தேவி- ஆகிய பெண் தெய்வங்கள் . இந்த பெண் தெய்வ வழிபாடு தான் உங்களின் இஷ்ட தெய்வ வழிபாடு ஆகும். இந்த பிறவியில் இந்த குறிப்பிட்ட பெண் தெய்வ வழிபாட்டை அதற்குரிய பிரத்யேக தருணங்களில் தொடர்ந்து மேற்கொண்டால்... ராகு திசை.. ராகு புத்தி... ராகு அந்தரம்... ராகு காலம்.. ஆகியவை உங்களுக்கு சுபமான பலன்களை அள்ளித் தந்து வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்யும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM