நிர்வாகம் பொறுப்பல்ல - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஆர் கே டிரீம் ஃபேக்டரி
நடிகர்கள் : எஸ். கார்த்தீஸ்வரன், ஸ்ரீ நிதி, மிருதுளா சுரேஷ், ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன் மற்றும் பலர்.
இயக்கம் : எஸ். கார்த்தீஸ்வரன்
மதிப்பீடு : 2.5 / 5
'நிர்வாகம் பொறுப்பல்ல' எனும் இந்த திரைப்படம் - பொதுமக்கள் ஏமாற்று பேர் வழிகளின் மோசடிகளில் சிக்கி கொள்ளாதீர்கள் என்பதனை விழிப்புணர்வு பாணியில் விவரிக்கும் படைப்பு என படக் குழுவினர் விளம்பரப்படுத்தியதால்.. ஏதேனும் சில நல்ல விடயங்களை தெரிந்து கொள்ளலாம் என ஒரு பிரிவினரும், மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம்? என்பதனை தெரிந்து கொள்வதற்காக ஒரு பிரிவினரும் இப்படத்தை காண பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.
'கே' ( எஸ். கார்த்தீபன் வரன்) எனும் இளைஞன் தனியார் நிறுவனத்தில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார். இக்காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகத்தான் நாளாந்த வாழ்க்கை செல்கிறது என்பதால்.. அன்றாட தேவைகளுக்காக சில பொருட்களை கடனுக்கு வாங்கி, அதனை மாத தவணையில் திருப்பி செலுத்தி வருகிறார். தனியார் வங்கியின் மறைமுக கட்டண பிடித்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்படும் கே- தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் உளவியல் நெருக்கடி காரணமாக... அந்த எதிர்மறையான அனுபவத்திலிருந்து போதிய அளவிற்கு விழிப்புணர்வை பெறாமல் ... மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம்? என்பதனை கற்றுக் கொள்கிறார். இதனை செயல்படுத்த நான்கு பேர் கொண்ட குழுவை உருவாக்குகிறார். இந்தக் குழுவினர் பல்வேறு வகையில் மக்களை ஏமாற்றி பத்தாயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் மோசடி குறித்து பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிக்க... இதனை அன்பரசி ( ஸ்ரீநிதி) எனும் காவல்துறை அதிகாரி விசாரிக்கத் தொடங்குகிறார். அவருடைய வலையில் கே சிக்குகிறார். அவருக்கு சிறை தண்டனை கிடைத்ததா? இல்லையா? மக்களிடம் இருந்து மோசடி செய்து சம்பாதித்த பணம் மீண்டும் மக்களுக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
மக்களிடம் இருக்கும் பேராசை தான் அவர்களை ஏமாற்ற மோசடி பேர் வழிகளை தூண்டுகிறது என்பதை வலியுறுத்தி இருப்பதால் இயக்குநரை பாராட்ட தோன்றுகிறது. அதற்காக அவர் விவரித்திருக்கும் திரைக்கதை சுவாராசியம் மிக்கதாக இருந்தாலும் படமாளிகைக்கான அனுபவ தருணங்களை வழங்க தவறுகிறது.
கே எனும் மோசடி கும்பல் தலைவனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனின் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும்.. அவரின் வேடங்கள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. இருப்பினும் நடனத்திலும், எக்சனிலும் தன் திறமையை நிரூபிக்கிறார்.
அன்பரசி எனும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரீ நிதியின் விசாரிக்கும் பாணியை விட அவரது அழகும், இளமையும் கவனிக்க வைக்கிறது.
கே யின் காதலியான மோகினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மிருதுளா சுரேஷின் நடிப்பும், தோற்றமும் இயல்பு.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையை விட ..'சக்சஸ் பார்ட்டி' பாடல் - இளம் தலைமுறையினருக்கான கொண்டாட்ட பாடல்.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
நிர்வாகம் பொறுப்பல்ல - விதிமுறைகள் - நிபந்தனைகள் குறித்த எச்சரிக்கை











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM