கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி  பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிராந்தியங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போதே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்கென அணியும் தலைக்கவசத்தை சுபய்ர் அகம்மட் அணிந்திராமையினாலேயே பந்து நேரடியாக தலையில் பட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சோக சம்பவம் தொடர்பாக பாகிஸ்தன் கிரிக்கெட் சபை “சுபய்ரின் உயிரிழப்பு மிகவும் கவலைக்குரியது. கிரிக்கெட் விளையாடும் போது வீரர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் என எமக்கு மற்றுமொரு முறை உணர்த்தியுள்ளது. எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுபய்ரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.