(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறினால் மைத்திரி, கோதாபய ஆட்சிகள் கவிழ்ந்தை போன்று அநுர ஆட்சியும் கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள் இந்த நாட்டில் வாழ முடியும். நாடு வளமாக இருக்க வேண்டுமாயின் இதுபோன்ற அனர்த்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நேரத்தில் சில விடயங்களை குறிப்பிட வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஆட்சி இல்லாமல் போனது. உர விடயத்திலேயே கோதாபய ராஜபக்ஷ்வின் ஆட்சி இல்லாமல் போனது. ஆனால் அநுரகுமாரவின் ஆட்சி இந்த அனர்தத்தினால் இல்லாமல் போகக்கூடாது என்பதனை கூறிக்கொள்கின்றோம். அவ்வாறன நிலை ஏற்பட்டால் எங்களால் காப்பாற்றவும் முடியாது. இதனால் அனர்த்த விடயத்தில, நீங்கள் முழுமையான வேலைகளை செய்யாவிட்டால் உங்களுக்கும் இதே நிலைமை ஏற்படும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM