மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக ஜனாதிபதி, அமைச்சரவையை ஐதாண்டு சிறை தண்டனைக்குட்படுத்த முடியும் - பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில

05 Dec, 2025 | 05:13 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பிற்கமைய மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக ஜனாதிபதியை ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும். மக்களின் உயிர் வாழும் உரிமையை அலட்சியம் செய்து ஜனாதிபதி உட்பட முழு அமைச்சரவையும் குற்றமிழைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவதித்தார்.

கொழும்பில்  வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களின் உயிர் வாழும் உரிமையை அலட்சியம் செய்து ஜனாதிபதி உட்பட முழு அமைச்சரவையும் குற்றமிழைத்துள்ளன. அரசியலமைப்பிற்கமைய மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக ஜனாதிபதியை ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

வரலாற்றில் பதிவான மிகப்பெரிய பேரழிவை கடந்த வாரம் நாம் சந்தித்தோம். ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட இத்தகைய பேரழிவைப் பற்றி இதற்கு முன் நாம் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பேரிடரில் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்த, பல்வேறு துன்பங்களுக்கு ஆளான அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இயற்கைப் பேரிடர் ஏற்படுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிட்டாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

2016ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது தற்போதைய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவே இதனைக் கூறினார். எனவே, இந்தப் பேரழிவினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததா என்பதைக் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிப்பது எதிர்க்கட்சியாகிய நமது கடமையாகும்.

நவம்பர் 12 ஆம் திகதி முதல், வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது. குறிப்பாக நவம்பர் 25 ஆம் திகதி பி.பி.சி. இது குறித்த எச்சரிக்கையை வழங்கியிருந்தது.

500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அது தொடர்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே இன்று நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

தேசிய இடர் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தேசியப் பேரழிவு நிலையை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்த தேசிய இடர் சபையை ஜனாதிபதி எந்தவொரு தருணத்திலும் கூட்டவில்லை.

அவ்வாறு செய்திருந்தால், முழு நாடும் கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்தச் செயல்பாட்டில் பங்கேற்றிருக்கும். குறிப்பாக, பேரழிவை எதிர்கொண்ட அனுபவம் இல்லாத அரசாங்கமாக இருந்ததால், முன்னர் இடர் முகாமைத்துவத்தில் அனுபவம் கொண்ட எதிர்க்கட்சியின் அனுபவத்தை நிலைமையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கும் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52