(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான முடிவை நோக்கி ஐந்தாம் நாளுக்குள் செல்லவுள்ளது.
போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் 531 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
அந்த இலக்கை அடைவது இலகுவான காரியம் அல்ல.

இரண்டாவது இன்னிங்ஸில் 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 140 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளனர்.
ஆட்ட நேர முடிவில் ஷாய் ஹோப் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 116 ஓட்டங்களுடனும் ஜஸ்டின் க்றீவ்ஸ் 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் ஜேக்கப் டபி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 417 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 8 விக்கெட்களை இழந்து 466 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
மூன்றாம் நாளன்று ரச்சின் ரவிந்த்ரா 176 ஓட்டங்களையும் டொம் லெதம் 145 ஓட்டங்களையும் பெற்றிருந்ததுடன் இன்றைய தினம் துடுப்பாட்டத்தில் எவரும் 30 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் கெமர் ரோச் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் முதல் இரண்டு தினங்களில் 430 ஓட்டங்களுக்கு 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. ஆனால் அடுத்த 2 தினங்களில் 646 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன் 12 விக்கெட்களே வீழ்த்தப்பட்டுள்ளது.
எண்ணிக்கை சுருக்கம்
நியூஸிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (கேன் வில்லியம்சன் 52, மைக்கல் ப்றேஸ்வெல் 47, ஒஜே ஷீல்ட்ஸ் 34 - 2 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 35 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 44 - 2 விக்., கெமர் ரோச் 45 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (ஷாய் ஹோப் 56, டேஜ்நரின் சந்தர்போல் 52, ஜேக்கப் டபி 34 - 5 விக்., மெட் ஹென்றி 43 - 3 விக்., ஸக் போக்ஸ் 32 - 2 விக்.)
நியூஸிலாந்து 2ஆவது இன்: 466 - 8 விக். டிக்ளயார்ட் (ரச்சின் ரவிந்த்ரா 176, டொம் லெதம் 145, டெவன் கொன்வே 37, மைக்கல் ப்றேஸ்வெல் 24, வில் யங் 23, கெமர் ரோச் 78 - 5 விக்., ஒஜே ஷீல்ட்ஸ் 74 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 531 ஓட்டங்கள் - 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்: 212 - 4 விக். (ஷாய் ஹோப் 116 ஆ.இ., ஜஸ்டின் க்றீவ்ஸ் 55 ஆ.இ., ஜேக்கப் டபி 65 - 2 விக்.)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM