(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கெப் வாகனம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எனக்கு கெப் வாகனம் கிடைக்க வேண்டும். ஒரு கெப் வாகனத்தின் விலை 210 இலட்சம் ரூபா என்றும், அதன் காப்புறுதி பெறுமதி 10 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இந்த கெப் வேண்டாம்.அந்த நிதியை சுகாதார அமைச்சுக்கு மருந்து கொள்வனவுக்கு வழங்குங்கள் என்று சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தவுள்ளேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பேரிழப்பு கவலைக்குரியது. தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும் இந்நிலையிலும் அரசாங்கம் தான்தோன்றித்தனமாகவே செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை.
எம்மால் இயலுமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரமளித்துள்ளோம். 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கெப் வாகனம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எனக்கு கெப் வாகனம் கிடைக்க வேண்டும். ஒரு கெப் வாகனத்தின் விலை 210 இலட்சம் ரூபா என்றும், அதன் காப்புறுதி பெறுமதி 10 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இந்த கெப் வேண்டாம்.அந்த நிதியை சுகாதார அமைச்சுக்கு மருந்து கொள்வனவுக்கு வழங்குங்கள் என்று சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தவுள்ளேன்.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் எனது மாத சம்பளத்தை பாடசாலை மாணவர்களுக்கு உரிய எழுதுவினை பொருட்கள் வழங்கும் ' ஆதரய' திட்டத்துக்கு ஒதுக்கவுள்ளோம். நாடளாவிய ரீதியில் இந்த திட்டத்தை அமுல்படுத்துவோம்.
இந்த அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியதாக அறிவுறுத்தியும் அரசாங்கம் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமானதாக அமையாது.ஆகவே புதிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM