பங்களாதேஷுடனான 2ஆவது இளையோர் 3 நாள் கிரிக்கெட்  போட்டியில் இலங்கை அபார வெற்றி; தொடர் 1 - 1 என சமமானது

05 Dec, 2025 | 02:00 PM
image

(நெவில் அன்தனி)

டாக்கா, மிர்பூர் பங்ளா தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை நிறைவடைந்த 17 வயதுக்குட்பட்ட இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வெற்றிபெற்றது.

அணித் தலைவர் ரெஹான் பீரிஸ் குவித்த அபார சதம், ஜேசன் பெர்னாண்டோ பெற்ற அரைச் சதம், ஹிமரு தேஷானின் 11 விக்கெட் குவியல் என்பன இலங்கை இளையோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது.

மிர்பூரில் இறுக்கமான முடிவை தந்த முதலாவது போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது 3 நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.

ஹிமாரு தேஷான், மினுங்க நெத்சர, மனித்த ராஜபக்ச ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குபட்ட இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

ரெஹான் பீரிஸ் 422 நிமிடங்களில் 286 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 182 ஓட்டங்களைக் குவித்தார். ஜேசன் பெர்னாண்டோ 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

17 வயதுக்குபட்ட பங்களாதேஷ் அணி 2ஆவது இன்னிங்ஸில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 278 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் 8ஆம் இலக்க வீரர் சௌரவ் கார்மோகர் 123 ஓட்டங்களையும் 7ஆம் இலக்க வீரர் ஜுனைத் ஹொசன் 78 ஓட்டங்களையும் பெற்றதுடன் 7ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் ஹிமரு தேஷான் 8 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

66 ஓட்டங்ககள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

17இன் கீழ் பங்களாதேஷ் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 122 (சௌரவ் கார்மோகர் 42, மனித்த ராஜபக்ச 21 - 3 விக்., மினுக நெத்சர 34 - 3 விக்., ஹிமரு தேஷான் 44 - 3 விக்.)

17இன் கீழ் இலங்கை 1வது இன்: 335 - 7 விக். டிக்ளயார்ட் (ரெஹான் பீரிஸ் 182, ஜேசன் பெர்னாண்டோ 65, மனித்த ராஜபக்ச 27 ஆ.இ., சஹிதுல் இஸ்லாம் 114 - 5 விக்.)

17இன் கீழ் பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 278 (சௌரவ் கார்மோகர் 123, ஜுனைத் ஹொசன் 78, ஹிமரு தேஷான் 46.1 - 13 - 93 - 8 விக்.)

ஆட்டநாயகன்: ரெஹான் பீரிஸ்.

தொடர் நாயகன்: ஹிமரு தேஷான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52