70% வரையான விலைக்கழிவுடன் பண்டிகை மாயாஜாலத்தை கொண்டு வரும் கொம்பேங்க் அட்டைகள்

05 Dec, 2025 | 01:19 PM
image

கொமர்ஷல் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் மிகச் சிறந்த சலுகைகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய அட்டை ஊக்குவிப்புடன் பண்டிகைக் காலத்தை ஆரம்பிக்கிறது.

இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது கடனட்டை மற்றும் வரவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விற்பனை நிலையங்களைக் கொண்டமைந்துள்ள 642க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களில் 70% வரையிலான  விலைக்கழிவுகளை வழங்குகிறது.

நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை இடம்பெறவுள்ள ஒரே ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ஆடை மற்றும் அணிகலன்கள், ஆபரணங்கள், பாதணிகள் மற்றும் தோல் ஆடைகள், நகைகள், வாழ்க்கை முறை பொருட்கள், மற்றும் அழகுசாதனப் பொருட்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள், இணையவழி விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள், சுகாதாரம், உணவு, வாகன மற்றும் உதிரிப்பாகங்கள், ஹோட்டல்கள், புத்தகக் கடைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பிரத்தியேக சேமிப்புகளைக் கொண்டுள்ளது.

வெள்ளைப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது 60 மாதங்கள் வரையிலான இலகுவான கட்டணத் திட்டங்கள் மூலமும் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இவற்றுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகர்களிடம் இருந்து தமது கட்டணங்களை தவணைத் திட்டங்களாக மாற்ற வங்கியின் அழைப்பு மற்றும் மாற்று வசதியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள்.

இந்த ஊக்குவிப்பு தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் பிரதிப்பொது முகாமையாளர் -தனிநபர் வங்கி சேவைகள் பிரிவு திரு. எஸ். கணேசன் தெரிவிக்கையில்; 'டிசம்பர் மாத ஊக்குவிப்புத் திட்டங்களில் அட்டை ஊக்குவிப்பானது எமது வருடாந்த நாட்காட்டியில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த கொள்வனவு அனுபவத்தை வழங்குவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்துள்ளோம். அவர்கள் இந்தப் பண்டிகைக் காலத்தை கொண்டாடும் போது, அர்த்தமுள்ள சேமிப்புகளையும் வசதிகளையும் அனுபவிக்க முடியும்.'

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய...

2026-01-12 13:59:19
news-image

நிர்க்கதிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு...

2026-01-08 19:04:29
news-image

HelaGo அறிமுகம்: இலங்கையில் புதிய நியாயமான...

2026-01-07 15:57:51
news-image

2024 - 25க்கான Business Today’s...

2026-01-06 19:06:17
news-image

2025 "CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...

2026-01-06 15:34:16
news-image

இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன்...

2026-01-06 15:23:21
news-image

HelaGo அறிமுகம் : இலங்கையில் புதிய...

2026-01-05 18:47:55
news-image

வட மாகாணத்தின் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு...

2026-01-05 16:47:51
news-image

இலங்கையின் முதல் ATM வணிகம், தொழில்நுட்ப...

2026-01-02 15:34:14
news-image

தேசிய லொட்டர் சபையால் 1,265 மில்லியன்...

2026-01-01 15:54:35
news-image

கார்கில்ஸ் வங்கி தெஹிவளை கடற்கரையை சுத்தம்...

2026-01-01 15:51:49
news-image

எல்ஜீ அபான்ஸ் குறியீடு தூதுவரானார் பெத்தும்...

2026-01-01 14:33:04