இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் கல்வ் ஜயன்ட்ஸ் அபார வெற்றி

05 Dec, 2025 | 01:01 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட்டின் 3ஆவது போட்டியில் இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் MI எமிரேட்ஸ் அணியை கல்வ் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

அப் போட்டியில் MI எமிரேட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்வ் ஜயன்ட்ஸ் 14.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க அதிரடியாகத்  துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களை விளாசி வெற்றிக்கு 7 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் இழந்தார்.

மொயின் அலியுடன் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லூ ஓமர்ஸாயுடன் 4ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

மொயின் அலி 26 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய MI எமிரேட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அணித் தலைவர் கீரன் பொலார்ட் 50 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து...

2026-09-16 13:59:44
news-image

சுப்பர் லீக் கடைசிப் போட்டியில் புளூ...

2026-09-15 21:08:58
news-image

இங்கிலாந்துடனான ரி20 தொடர் தோல்விகளுக்கு முடிவு...

2026-09-15 19:18:47
news-image

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன்...

2026-09-15 14:49:55
news-image

சாதனை வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த...

2026-09-15 13:52:00
news-image

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் :...

2026-09-15 13:36:58
news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41