தெரிவுக்குழுத் தலைவராக ஜயசூரிய நியமனம்?

Published By: Robert

24 Jan, 2016 | 10:01 AM
image

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலை­வ­ராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன் னாள் அணித்­த­லை­வ­ரான சனத் ஜய­சூ­ரிய நிய­ மிக்­கப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக இலங்கை கிரிக் கெட் சபை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், விளை­யாட்டுத் துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை நிர்­வா­கி­களும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தாக முன்னர் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், தற்­போ­துள்ள இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலை­வ­ராக கபில விஜ­ய­வர்­தன கட­மை­யாற்றி வரு­கிறார். இவர், முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்­க­வினால் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வ­ராவார்.

மேலும், கபில விஜ­ய­வர்­தன தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு­வா­னது, எதிர்­ வரும் இந்­திய கிரிக்கெட் அணி­யு­ட­னான கிரிக் கெட் தொடரில் பங்­கு­கொள்ளும் இலங்கை கிரிக் கெட் அணியை தெரி­வு­செய்யும்.

இதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி பங்­கு­கொள்ளும் கிரிக்கெட் தொடர்­க­ளுக்­கான வீரர்கள் தெரிவை, புதி­தாக நிய­மிக்­கப்­படும் இலங்கை கிரிக்கெட் தெரி­வுக்­கு­ழு­விடம் வழங்­கப்­படும் என வும் கூறப்­ப­டு­கி­றது.

கடந்த 2014ஆம் ஆண்டு பங்­க­ளாதேஷில் நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொட­ருக்­கான இல ங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தெரி­வா ­னது, அப்­போ­தைய தெரிவுக் குழு தலை­வ­ராக செயற்பட்ட சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவே என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26