ஆந்திராவில் மிக உயரத்தில், நீளமான கண்ணாடி நடைபாலம்!

04 Dec, 2025 | 07:13 PM
image

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் அந்நாட்டின் மிக உயரமான, நீளமான கண்ணாடி நடைபாலம் திறக்கப்பட்டுள்ளது. 

கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் 50 மீட்டர் நீளத்தில் இந்த கண்ணாடி நடைபாலம் அமைந்துள்ளது. 

அந்நாட்டின் பண மதிப்பில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் “கிழக்குக் கடற்கரையின் ஆபரணம்” என அழைக்கப்படுகிறது. 

அடிப்பகுதியில் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நடப்பதைப் போன்ற அச்ச உணர்வை இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தினாலும், இயற்கை அழகு சூழ்ந்த வானவெளியில் நடப்பதைப் போன்ற அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

360 டிகிரி கோணத்தில் சுற்றிலும் பசுமையான வெளியில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 மி.மீ தடிமன் கொண்ட உயர்தர 3 அடுக்கு கண்ணாடிகள், 40 தொன் வலுவூட்டப்பட்ட எஃகு (உருக்கு) பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் வீசினாலும் தாங்கி நிற்கக்கூடிய அளவு பலம் கொண்டதாக இந்த கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39