இந்தியா தடை செய்த ரயில் சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளன

Published By: Digital Desk 7

17 Aug, 2017 | 11:43 AM
image

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவோம் என வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தமையை கண்டித்து அப்பகுதி மக்களால் புகையிரதத்தை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது மக்கள் பிரதிநிதிகளும், பொலிஸாரும் அங்கு கலந்துகெண்டிருந்தனர்.

இதன்போது பொலிஸார் புகையிரதத் திணைக்களத்திற்கு உரித்தான கடவைக்கு சென்று புகையிரதக் கடவை காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த நிலையிலான பொலிஸ் அதிகாரியானாலும் புகையிரத கடவை காப்பாளர்களிடம் பொது மன்னிப்பை கோரவேண்டும்.

வடக்கிற்கான புகையிரத சேவை இடம்பெற்றதன் பின்னர் 41 புகையிரத விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் எங்களது ஊழியர்கள் கடமையில் உள்ள கடவைகளில் எந்த விபத்துக்களும் ஏற்படவில்லை.

இவ் விபத்துக்கள் பொலிஸாரின் கவனயீனத்தாலும்,  புகையிரத திணைக்களம் அவ்விடங்களில் இருந்து தமது ஊழியர்களை வெளியேற்றியமையினாலுமே ஏற்பட்டுள்ளது.

அத்துடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டமையினாலும் ஏற்பட்ட விபத்துகளுக்கு புகையிரத திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். மாறாக பொலிஸார் எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.

இதுதவிர இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட தானியங்கி சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து அகற்றப்பட்டவை. இந்த சமிக்ஞை விளக்குகள் அந்த நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்டவை என்பதனை நாம் உறுதிப்படுத்துவோம்.

இந்த சமிக்ஞைகள் தொடர்ந்தும் இயங்குவதனால் மின்சாரசபைக்கு பெரும் நட்டம் ஏற்படுவதுடன் அதில் உள்ள மின்குமிழ்கள் தொடர்ந்து பழுதடைவதால் அதனை இந்தியாவில் இருந்தே கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே புகையிரதத் திணைக்களம் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

போக்குவரத்து அமைச்சர் எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தினையும் பழிவாங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தி இந்த நாட்டின் பிரஜைகளான புகையிரத கடவை காப்பாளர்களை மனிதர்களாக மதித்து அவர்களது சேவைக்கான கௌரவத்தினை வழங்கி நிரந்தர நியமனத்தினை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02