கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மன நலனைப் பேணுவதற்கான பொழுதுபோக்கு நிகழ்வுகள்  

04 Dec, 2025 | 05:45 PM
image

கொழும்பில் கொலன்னாவை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான மீதொட்டமுல்ல அரச நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகம் மற்றும் கொலன்னாவை டெரன்ஸ் என்.டி. சில்வா மகா வித்தியாலய வளாகங்களில் குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் குறுகிய செயற்பாடு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நேற்று (3) நடத்தப்பட்டன.

சமீபத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அப்பகுதிக்கு விஜயம் செய்தபோது இந்நிகழ்வு குறித்து ஆலோசனை வழங்கியிருந்தார். 

அதன் பிரகாரம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிகளை முகாம் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஒழுங்கமைத்திருந்தனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கை அனர்த்தமானது சிறுவர்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளதுடன், அன்புக்குரியவர்களின் இழப்பு, பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கல்வி தடைப்படுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தனிமை, உணர்ச்சி ரீதியான துயரம், பயம் மற்றும்  செயற்பாடு குறைந்த நிலை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுத்துள்ளது. 

சிறுவர்கள் இத்தகைய உணர்வு ரீதியான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கும், அவர்களது இயல்பு நிலையை மீண்டும் பெறுவதற்கும் இந்நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00
news-image

நாற்பதாவது கலாபூஷண அரச விருது விழா...

2026-01-13 10:32:32
news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12