ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

04 Dec, 2025 | 03:54 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல நுட்பமான சூத்திரங்களை தெரிந்து வைத்திருப்பர். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவர்களிடத்தில் உள்ள தயக்கமும், அச்சமும் பாரிய தடையாக ஆக்கிரமித்திருக்கும்.

இதனை நீங்கள் உடைத்து வெளியேற வேண்டும் என்றால் உங்களின் ஆன்ம பலம் அதிகரிக்க வேண்டும். ஆன்ம பலம் அதிகரிப்பதற்கு என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல பிரத்யேக வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.

எம்முடைய ஆன்மாவின் வலிமை அதிகரிப்பதற்கு அதற்கு காரகத்துவம் பெற்ற கிரகமான  சூரிய பகவானை வணங்கிட வேண்டும். சூரிய பகவானை நாளாந்தம் ஆத்ம பூர்வமாக வழிபடத் தொடங்கினால் எம்முடைய ஆன்ம பலம் அதிகரிக்க தொடங்கும்.

நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய உதயத்தின் போது சூரிய காயத்ரி மந்திரம் - ஆதித்யஹிருதயம் போன்ற மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து உச்சரிக்கும் போது மந்திரம் சித்திக்கும். அதாவது நீங்கள் லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கையிலான மந்திரத்தை உச்சரித்த பிறகு உங்களுடைய ஆன்ம பலம் மேம்படுவதை உணர இயலும்.

இதனை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்கள் கவலை அடைந்து துயரத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கான நபர் அருகே வந்து தோளைத் தொட்டு 'கவலைப்படாதே' என்ற ஒரு அழுத்தமான த்வொனியில் சொல்லி உங்களை ஆறுதல் படுத்துவார். அதே தருணத்தில் நீங்கள் சிக்கலாக இருக்கும் தருணத்திலும் தவறான நபர்கள் உங்களை நெருங்க இயலாது.

இதுபோன்ற சூட்சம பாதுகாப்பு வளையத்தை உங்களின் ஆன்ம பலம் உண்டாக்கும். இதன் மூலமாக உங்களுக்கு மன அமைதி பெறுவீர்கள். மனம் தெளிவாக சிந்திக்க தொடங்கும் போது உங்களுடைய படைப்பாக்க சிந்தனை மற்றும் புதுப்பிக்கத்தக்க வல்ல மாற்று சிந்தனை உங்களை வழிநடத்தி வெற்றியாளராகவும், சாதனையாளராகவும் மிளிர வைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01
news-image

பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் எப்போது எழுத...

2026-07-01 16:04:37