மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்டில் டொம் லெதம், ரச்சின் ரவிந்த்ரா சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் நியூஸிலாந்து

Published By: Digital Desk 3

04 Dec, 2025 | 03:39 PM
image

(நெவில் அன்தனி)

கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்  மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (04) அணித் தலைவர் டொம் லெதம், ரச்சின் ரவிந்த்ரா ஆகியோர் குவித்த சதங்களின் உதவியுடன் நியூஸிலாந்து மிகவும் பலமான நிலையை அடைந்துள்ளது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களிலிருந்து  இன்று காலை   தொடர்ந்த நியூஸிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 417 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதற்கு அமைய நியூஸிலாந்து 481 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் மாத்திரம் நியூஸிலாந்து 385 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டியின் முதல் இரண்டு நாட்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும் மூன்றாம் நாளான இன்றைய தினம் டொம் லெதமும் ரச்சின் ரவிந்த்ராவும் மிகவும் சாமர்த்தியமாக வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சதங்கள் குவித்து அசத்தினர்.

டெவன் கொன்வே (39), கேன் வில்லியம்சன் (9) ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (100- 2 விக்.)

அதன் பின்னர் டொம் லெதம், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து சதங்கள் குவித்து நியூஸிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 279 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டொம் லெதம் 350 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 145 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 185 பந்துகளை எதிர்கொண்டு 27 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 176 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்ட நேர முடிவில் வில் யங் 21 ஓட்டங்களுடனும் மைக்கல் ப்றேஸ்வெல் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஒஜே ஷீல்ட்ஸ் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்ததியுள்ளார்.

முதலாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 231 ஓட்டங்களையும் மேற்கிந்தியத் தீவுகள் 167 ஓட்டங்களையும் பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33