லிவிங்ஸ்டோன் அதிரடி துடுப்பாட்டம்;  அபு தாபி நைட் ரைடர்ஸ் வெற்றி

04 Dec, 2025 | 03:28 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஷார்ஜா வொரியர்ஸ் அணியை 39 ஓட்டங்களால் அபு தாபி நைட் ரைடர்ஸ் வெற்றிகொண்டது.

ஷார்ஜா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இப் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாகக் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்த வெற்றிக்கு வித்திட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அபு தாபி நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 38 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 82 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஷேர்பேன் ரதர்போர்ட் 27 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களை விளாசினார்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். அவர்களை விட அலிஷான் ஷராபு 34 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆதில் ராஷித் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷார்ஜா வொரியர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

டிம் டேவிட் 60 ஓட்டங்களையும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 39 ஓட்டங்களையும் ஆதில் ராஷித் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜோர்ஜ் கார்ட்டன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒல்லி ஸ்டோன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்ட்றே ரசல் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லியாம் லிவிங்ஸ்டோன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்...

2026-01-24 17:43:46
news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49