போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான இலங்கை அர­சாங்­கத்தின் செயல்­மு­றை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பானின் போர்க்­குற்ற விசா­ரணை நீதி­ப­தி­யான மோட்டூ நுகுசி இலங்கை வர­வுள்ளார். ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இதற்கு உதவும் நோக்­கி­லேயே ஜப்பான் தனது சிறப்புப் பிர­தி­நி­தியை இன்று கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­க­வுள்­ளது.

கம்­போ­டி­யாவில் கெமர் ரூஜ் ஆட்­சிக்­கா­லத்தில் நிகழ்ந்த போர்க்­குற்­றங்­களை விசா­ரித்து வரும் தீர்ப்­பா­யத்தில் அங்கம் வகித்த மோட்டூ நுகுசி என்ற நீதி­ப­தியே ஜப்­பா­னிய பிர­தி­நி­தி­யாக கொழும்பு வர­வுள்ளார்.

இவர், ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறிசேன பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.