சபை முதல்வரின் ‘தீய சக்திகள்’ என்ற கருத்துக்கு எம்.பி திலித் ஜயவீர கடும் எதிர்ப்பு

Published By: Vishnu

04 Dec, 2025 | 05:16 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அனர்த்தங்களின் போது கண்டிக்கு சென்ற தீய சக்திகள் என்று  சபை முதல்வர்  பிமல் ரத்நாயக்க  குறிப்பிட்டதற்கு  சர்வஜன அதிகாரத்தின்  பாராளுமன்ற உறுப்பினர்  திலித் ஜயவீர  கடும் எதிர்ப்பை  வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கும்,  ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற  2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடுகள்  மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களை தொடர்ந்து  திலித் ஜயவீர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விவாதத்தில்  உரையாற்றிய  சபை முதல்வர்  பிமல் ரத்நாயக்க,அனர்த்தத்தின் போது  கொழும்பில் இருந்து  கண்டிக்கு தீய சக்தியொன்று சென்றதாகவும், அவர்கள் அரச அதிகரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.இவர்களின் செயற்பாடு மிகவும் கீழ்த்தரமானது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தீய சக்தி கண்டிக்கு சென்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அந்த சக்தி தீயது என்றால் அந்த குழுவில் நானும் இருந்தேன்.  தற்போதைய  நெருக்கடியான  நிலையில் நாங்கள் எந்த கட்சி பேதமும் இன்றி வடக்கு, கிழக்கு? தெற்கை சேர்ந்த   முன்னாள்,இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்   சென்றோம்.

கண்டி மாவட்டத்திலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளது.  எமது கடமையாக நாங்கள் அங்கு சென்றோம். சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு நாங்கள் போகும் போது மாவட்ட அரசாங்க அதிபரின் ஆசனத்தில் ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

 அவரை நாங்கள் அடையாளம் காணவில்லை. பின்னர் கலந்துரையாடும் போதே அதனை புரிந்துகொண்டோம். அரசாங்க அதிபர் வேறு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இப்படி நடக்க முடியுமா? நாங்கள் உதவி செய்வதற்காகவே அங்கு சென்றோம். எவ்வித பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக அங்கு செல்லவில்லை. நல்ல யோசனைகளையே முன்வைத்தோம். இதனை தீய சக்தியாக தீயவர்களாலேயே பார்க்க முடியும். முதலில் தன்னிச்சையாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுங்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்,  லக்மாலி ஹேமச்சந்திர, அனர்த்த நிலைமை குறித்து கடந்த நவம்பர் 12ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற  தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திலித் ஜயவீரவின் ஊடகமே நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் இறந்த உடல்களின் மீதிருந்து அரசியல் செய்கின்றனர் என்றார்.

இவ்வேளையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த திலித் ஜயவீர, இவர் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். இதுவே தீய அரசியல் என்பது. நீங்கள் எடுத்த நடவடிக்கை தீயதே. தெரணவில் செய்து வாசிப்பவர் நானில்லையே என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய  லக்மாலி ஹேமச்சந்திர பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஒழுங்குபிரச்சினையை எழுப்பிய போதும், சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை. எனினும் திலித் ஜயவீர தொடர்ந்தும் அது தொடர்பில் கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் திலித் ஜயவீரவுக்கு ஒழுங்கு பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டது.இவர் கூறும் இந்த விடயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விடயமே. இது தொடர்பில் வேண்டுமென்றால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இவ்வாறு கூற முடியாது. இதுவே தீய சக்தியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30