வவுனியாவில் கடும் மழை மற்றும் புயல் காரணமாக 114 குளங்கள் உடைப்பு: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு 

Published By: Vishnu

04 Dec, 2025 | 05:03 AM
image

வுனியாவில் பெய்து வந்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் புயலின் தாக்கத்தின் காரணமாக தாழ்நில பிரதேசங்களில் நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதனால் பல குளங்கள் வான் பாய்ந்ததுடன் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளது.

 இதன் காரணமாக மக்களுடைய குடிமனைகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் குளத்து வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றனர். இவ்வாறு உடைப்பெடுத்த 114 குளங்களில் 33 குளங்களை ராணுவத்தினரின் உதவியுடன் அதன் அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஏனைய குளங்களையும் அதனைத் தொடர்ந்து கட்டுமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45