அமெரிக்க கடற்பாதுகாப்புப் படையின் (U.S. Coast Guard) சேவையில் இருந்த மேலும் ஒரு கப்பல் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இலங்கைக்காக ஒப்படைக்கப்பட்ட நான்காவது கப்பல் இதுவாகும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்தார்.

ஜுலி சங் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டதாவது:
‘டித்வா’ புயலுக்கான அவசர நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், கடல் வழித்தடங்கள் மற்றும் கடற்படை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

புதிய கப்பல் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்படுவது, இரு நாடுகளுக்கிடையேயான கடற்படை கூட்டுறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

கப்பல் இலங்கை கடற்பரப்பை அடைவதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.
குறித்த கப்பல் எதிர்காலத்தில் போதைப்பொருள் கடத்தல், கடல் வழி கடத்தல், மற்றும் கடற்பரப்பில் அவசர தேடல்–மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்தும்.
இந்த முயற்சி அமெரிக்காவின் நீண்டகால கடற்படை பாதுகாப்பு மற்றும் தயார்நிலை உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு ஆகும்.
இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும் இந்த புதிய கப்பல், நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்தும்.
குறித்த நிகழ்வானது "பால்ட்டிமோர், மேரிலேன்ட் டில் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM