நீங்கள் நினைத்த காரியம் எதுவும் நினைத்தபடி நடைபெறாமல் கவலையையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது என்றால்... நீங்கள் சோதிட நிபுணரை அணுகி, காரணம் என்ன? என்பதை அறிந்திருப்பீர்கள். அவரும் நீங்கள் தற்போது பிதுர் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் ..அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பரிகாரத்தையும் பரிந்துரை செய்திருப்பார். அதை நீங்கள் மேற்கொண்டாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால்.. சோதிட நிபுணர் பரிந்துரைத்த பரிகாரத்தை மேற்கொண்ட பிறகு... ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடும் இந்த சூட்சம வழிபாட்டையும் பின்பற்றினால் விரைவில் சுபமான பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலான சூரிய ஓரை தருணத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையில் கைப்பிடி அளவு கோதுமை தானியத்தை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது இரண்டு நெய் தீபங்களை ஏற்றி, 'பிதுர் தோஷம் குறைய வேண்டும். பிதுர் தோஷம் விலக வேண்டும்.
பிதுர் தோஷத்தால் ஏற்பட்டிருக்கும் தடையும், தாமதமும் விலக வேண்டும்' என மனதால் பிரார்த்திக்க வேண்டும். இதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் போது பத்து அல்லது 19 வாரங்களுக்கு பிறகு உங்களுடைய பிதுர் தோஷத்தின் வீரியம் குறைவதை அனுபவத்தில் காணலாம்.
சிலருக்கு இத்தகைய தருணத்தில் உடல் சுகவீனம் ஏற்படக்கூடும். வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற்றாலும் பூரண நலம் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் சிலருக்கு பாதிப்பு நாட்பட்டதாகக்கூட மாற்றம் பெறும். இவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று, உடன் எடுத்துச் சென்றிருக்கும் ஒரு முழு வெள்ளை பூசணிக்காயை ஆலய வளாகத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து உங்கள் மடிமீது வைத்துக் கொண்டு, தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் பெருக வேண்டும் என முருகப்பெருமானிடம் மனம் உருக பிரார்த்தனை செய்திட வேண்டும். அதன் பிறகு ஆலயத்திற்கு வெளியே வந்து அங்குள்ள யாசகர்களிடம் பூசணிக்காயை தானமாக பெற்றுக்கொள்ள சம்மதமா? என கேட்டு, அவர்களிடம் அந்த பூசணிக்காயையும், உடன் காணிக்கையையும் செலுத்தினால்... உங்களுடைய தோஷம் நீங்குவதுடன், ஆரோக்கியத்தில் முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM