நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முதலாளி..' எனும் பாடலும், 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' எனும் எம்ஜிஆர் பட பாடலை ரீமிக்ஸ் செய்து, அதற்கான ப்ரோமோவும் வெளியிடப்பட்டு, இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ஜி எம் சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான காவல்துறை அதிகாரி ஒருவரின் வாழ்வியலை கொமர்சலாக பேசும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மு த லா ளி..' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் துரை எழுத பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலத்தேய இசையின் தாளலயத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அத்துடன் இந்தப் படத்தில் நாயகன் கார்த்தி மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தீவிர ரசிகராக தோன்றுவதால் எம்.ஜி.ஆரின் நடிப்பில் தயாராகி 1966 ஆம் ஆண்டில் வெளியான 'அன்பே வா' எனும் திரைப்படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..' என தொடங்கும் பாடல் இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதனை ரீமிக்ஸ் செய்திருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்- தன் தாயாருடன் இணைந்து பாடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பெருவாரியான டிஜிட்டல் தள ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM