சண்முக பாண்டியன் விஜயகாந்த் - சரத்குமார் கூட்டணி இணைந்து மிரட்டும் 'கொம்பு சீவி' படத்தின் புதிய பாடல் வெளியீடு

03 Dec, 2025 | 06:05 PM
image

தமிழ் சினிமாவின் நிகரற்ற கவர்ச்சி நடிகையான மறைந்த சில்க் ஸ்மிதாவின் நினைவை போற்றும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் - சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் 'கொம்பு சீவி' எனும் படத்தில் இடம்பெற்ற ' வஸ்த்தாரா' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார், தார்னிகா , அனய்ரா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'மச்சான்லு மாமாலு எல்லா ஆளும் மணவாலு..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சுப்பர் சுப்பு எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி பாடகி விஷ்ணு பிரியா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். கடந்த தசாப்தங்களில் தமிழ் சினிமாவில் வணிக முத்திரையாக திகழ்ந்து மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவை போற்றும் வகையில் குத்தாட்ட பாடலாக இடம் பிடித்திருக்கும் இந்தப் பாடலும், பாடலுக்கான காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசியால் ஷகிலாவுக்கு வந்த வினை ;...

2026-08-14 09:07:42
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 16:47:54
news-image

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா'...

2026-08-13 16:33:18
news-image

"வேலை இல்லை என்பதால்தான் பிக் பொஸ்...

2026-08-13 11:19:55
news-image

67 ஆண்டுகள் சினிமா பயணம்… உலக...

2026-08-13 11:28:39