நோயின் தீவிரத்தை துல்லியமாக அவதானிக்கும் தமனி குருதி வாயு ( ABG) பரிசோதனை

03 Dec, 2025 | 05:47 PM
image

வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக எம்மில் பலருக்கும் வயது வித்தியாசம் இன்றி மூளை - இதயம்-  கல்லீரல்-  சிறுநீரகம்- உள்ளிட்ட அத்தியாவசியமான உறுப்புகளில் திடீர் பாதிப்பு எந்த தருணத்திலும் நிகழ்கிறது. இத்தகைய தருணத்தில் நோய் பாதிப்பிற்கு ஆளானவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து முதலுதவி மற்றும் நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள்.

இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானிக்க வைத்தியர்கள் தமனி குருதி வாயு எனும் குருதி பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இது ஏன்? என பல தருணங்களில் எமக்கு புரிவதில்லை. இந்நிலையில் இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

மூளையில் பாதிப்பு ஏற்பட்டோ அல்லது இதய பாதிப்பு- நெஞ்சு வலி போன்றவற்றின் காரணமாகவோ அல்லது வயிற்று வலி- சிறுநீரக பாதிப்பின் காரணமாகவோ உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளை... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படும். அத்தகைய தருணங்களில் தமனி குருதி வாயு எனும் பிரத்யேக பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய பரிசோதனை மூலம் நோயாளியின் குருதியில் உள்ள ஓக்சிஜன் - கார்பன் டை ஓக்சைடு ஆகியவற்றின் அளவினை துல்லியமாக அவதானிக்கலாம். இதனுடன் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சோடியம் -பொட்டாசியம்- குளோரைடு- பை கார்பனேட் - ரத்த சர்க்கரை அளவு - என பல விடயங்கள் குறித்தும் துல்லியமாக அவதானிக்க இயலும். அத்துடன் காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை குறித்த சமநிலை குறித்தும் அவதானிக்க இயலும். இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று நிமிடங்களிலேயே மேலே விவரிக்கப்பட்ட பிரத்யேக குருதி பரிசோதனை மூலம் அவதானிக்க இயலும். இதைத்தொடர்ந்து அவர்களுக்கான முழுமையாக நிவாரணம் அளிக்கக்கூடிய சிகிச்சை தீர்மானிக்கப்பட்டு அவை வழங்கப்படும்.

அத்துடன் நோயாளியின் சுவாச அமைப்பு - காற்றோட்ட அமைப்பு - வளர்ச்சிதை மாற்ற செயல்முறை - அதாவது நீங்கள் பசியாறும் உணவு உங்களுடைய உடல் எவ்வாறு ஆற்றலாக மாற்றுகிறது என்பது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இத்தகைய பரிசோதனை உதவுகிறது.

வைத்தியர் அனந்தகிருஷ்ணன் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திரவ வடிவிலான திசு பரிசோதனை யாருக்கு,...

2026-01-12 15:19:54
news-image

உள்நோக்கி வளரும் கால் நக பாதிப்பிற்கான...

2026-01-10 17:54:40
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-01-09 17:15:47
news-image

கருத்தரித்த பெண்களுக்கு டபுள்மார்க்கர் பரிசோதனை அவசியமா..?

2026-01-08 15:08:20
news-image

தொடர் இரத்த சர்க்கரை அளவை அவதானிக்கும்...

2026-01-07 16:48:36
news-image

பைலோனெஃப்ரிடிஸ் எனும் சிறுநீரக தொற்று பாதிப்பிற்குரிய...

2026-01-06 17:26:14
news-image

ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பிற்கான...

2026-01-05 17:03:48
news-image

மூளையில் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-01-03 16:06:53
news-image

சிறார்களுக்கு ஏற்படும் குருதி தொடர்பான பாதிப்பிற்குரிய...

2026-01-02 16:17:48
news-image

ஈசினோஃபிலீக் கிரானுலோமடோசிஸ் வித் பொலி ஒஞ்சியைடீஸ்...

2026-01-01 16:26:27
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பை அவதானிப்பது...

2025-12-31 17:15:49
news-image

ரீகர்ஜிடேசன் எனும் இதயத்தில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-12-30 17:57:43