(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டத்தின் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. அதனால் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து புதிய வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை கூறிக்கொள்கின்றேன். இந்த அனர்த்தங்களுக்கு 15 இலட்சம் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது சிக்கலானது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்பதற்கு மேலதிகமாக நிதி செலவிட வேண்டும்.
இதனால் இந்த நேரத்தில் வேலை செய்யக்கூடியவாறு வரவு செலவுத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோன்று இந்த நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் செல்லவும் முடியாது. இது தொடர்பிலும் அவதானத்தை செலுத்துமாறு கோருகின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டத்துடன் மேற்ஙகொள்ள முடியுமா என்ற பிரச்சினை இருக்கிறது. அதனாலே இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை தேசிய வேலைத்திட்டதுடன் தொடர்புபடுத்தியவாறு மீள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கிறோம்.
கிராமங்களில் மக்கள் பெரும் அழுத்தங்களுடன் இருக்கின்றனர். உயிர்களை இழந்தும், சொத்துக்களை இழந்தும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்துவருகின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
அத்துடன் இந்த அனர்த்த நிலையை முன்கூட்டி அறிந்து, அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும், அதேநேரம் அதிகாரிகள் இதுதொடர்பில் செயற்பட தவறி இருப்பதாக அரசாங்கத்தில் இருக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அதனால் இதுதொடர்பில் தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அந்த தெரிவுக்குழு திருடனின் தாயிடம் சாத்திரம் கேட்பதுபோல் அல்லாமல் வெளிப்படையான, சுயாதீன தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM