பேரிடரின் பின்னர் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மனநல வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராய்ச்சி

03 Dec, 2025 | 05:18 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு ஆளாகி தமது உடைமைகளையும் உறவுகளையும் இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறுவர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி அவர்களின் மனநலத்தை தேற்றுவதற்கு  சமூகம் என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராய்ச்சி  தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு முழுவதும் நிலவிய மோசமான கால நிலையால் பெரும் வெள்ளம், பாரிய மண்சரிவு, உள்ளிட்ட இயற்கை அனர்த்தத்தால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பேரிடரில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட உடமைகளையும் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர் என தமது உறவுகளை இழந்து பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.  அனர்த்தத்துக்கு முகம் கொடுத்ததன் பின்னர் ஒவ்வொரு சிறுவரினதும் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சமூகம் என்ற ரீதியில் அவர்களின் மனநலத்தை தேற்றுவது அனைவரினதும் கடமையாகும்.

தற்போது பிரதேச ரீதியில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் உதவியுடன் சிறுவர்களின் மனநலம் தொடர்பில் ஆராய்ந்து, உள ஆற்றுப்படுத்துவதற்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்குவது, பெற்றோரை தெளிவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரியவர்களாகிய நாம் நாம் எமது உணர்வுகளை வெளிக்காட்டுவது போல,  சிறுவர்கள் வெளிப்படுத்துவதில்லை.  அவர்களின் நடத்தை மாற்றத்தின் மூலமே மன்பாதிப்பை கண்டுக் கொள்ளமுடியும். சிறுவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். 

குறிப்பாக பாடசாலை சூழல் அவர்களின் உள நலத்தை வலுப்படுத்தும் மிக முக்கிய பகுதியாக உள்ளது.  அத்தோடு அனர்த்தத்தின் பின்னர் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவ்வாறான குடும்பங்களில் உள்ள சிறுவர்களின் பாடசாலை கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலும் பாடசாலைக்கு வரும் சிறுவர்களின் சீருடை, புத்தகங்கள் ஒழுங்கற்ற விதத்தில் இருப்பினும், ஆசிரியர்கள் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவமிளித்து அவர்களின் மனதை ஆற்றுப் படுத்துவதற்கு தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48
news-image

சுற்றாடல் அமைச்சு, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்...

2026-07-16 13:03:33