(நா.தனுஜா)
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுடனும் தாம் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் தெற்கு மற்றும் தெற்காசியப் பிராந்தியங்களில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பேரழிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றில் சிக்கி பெருமளவானோர் உயிரிழந்திருப்பது குறித்து மிகுந்த கவலையடைவதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், தாம் பாதிக்கப்பட்டோருடன் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நாடுகளின் நிவாரண மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அவரது எக்ஸ் தளப்பதிவில் உறுதியளித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM