புயல் எச்சரிக்கையை அரசு பின்பற்றவில்லை - தயாசிறி ஜயசேகர

03 Dec, 2025 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

புயல் மற்றும் வெள்ளம் தொடர்பில் காலநிலை ஆராய்ச்சி மையம் அரசாங்கத்துக்கு முன்கூட்டியதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.இது கவலைக்குரியது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்க  விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால்  ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்களையிட்டு  பெரும் வேதடையடைந்துள்ளோம். நாட்டின் சகல பிரதேச செயலக பிரிவுகளும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்ட ஒரு அனர்த்தமாகவே இது காணப்படுகிறது.  

அரசாங்க் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டதா  என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. சர்வதேச மட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள்.அரசாங்கம் தனக்கு தேவையானவர்களை நியமித்தது.  

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை ஊடாக சகல பிரதேச  செயலகங்களுக்கும் படகு மற்றும் உயிர்காக்கும் இயந்திரங்கள்  வழங்கப்பட்டன.இந்த அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்துக்காக எவ்வித முன்கூட்டிய நடவடிக்கைகளையும் கடந்த ஒருவருடகாலமாக மேற்கொள்ளவில்லை.

குளியாப்பிட்டி பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது பிரதேச செயலக பிரிவில் இருந்து படகுகள் இயங்கவில்லை.மீனவர்களின் படகுகளை பெற்றுக்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். புயல் மற்றும் வெள்ளம் தொடர்பில் காலநிலை ஆராய்ச்சி மையம் அரசாங்கத்துக்கு முன்கூட்டியதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.இது கவலைக்குரியது.

 வெள்ளம் பெருக்கெடுத்ததன் பின்னரே மிகவும் தாமதமான நிலையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன.இதனால் தான் பெருமளவிலான பகுதிகள் வெள்ள  நீரில் மூழ்கின.இந்த நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகள்  அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

 பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் விரைவாக நிவாரணமளிக்க வேண்டும்.  பெரும்பாலானவர்களின் தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இவர்களின் வங்கிக் கடன் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி கடன் செலுத்தலுக்கு நிவாரண காலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் -...

2025-12-05 20:06:36
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி...

2025-12-05 16:23:57
news-image

'எனக்கு கெப் வேண்டாம்; அந்த நிதியை...

2025-12-05 15:16:44
news-image

விவசாயம், பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த சர்வதேச நாடுகளின்...

2025-12-05 20:39:51
news-image

ஆடம்பரங்களை தவிர்த்து கிறிஸ்து பிறப்பு விழாவை...

2025-12-05 20:11:15
news-image

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக...

2025-12-05 17:13:10
news-image

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் முழுநாடும் அதிர்ச்சியடைந்துள்ளது...

2025-12-05 17:16:55
news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 20:03:15
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33