அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார் ; பாகுபாடுகள் வேண்டாம் - செல்வம் அடைக்கலநாதன்

03 Dec, 2025 | 05:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இக்கட்டான  நிலையில் நாட்டு மக்களுக்காக  இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக  பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன்  இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம். எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். அரசாங்கத்துடன் எவ்வித  கோபமும் கிடையாது. அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட   பாராளுமன்ற   உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளலாம் என்ற  ஆலோசனைகளை  அனைவரும் முன்வைக்க வேண்டும்.  அரசாங்கத்தை   விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகின்றேன். இரவு பகலாக அவர் முழு மூச்சாக செயற்படுகின்றார்.அவருக்கும் அரசாங்கத்துக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது அயல் நாடான இந்தியாவுடன்  அரசாங்கம்  இணக்கமாகவே  செயற்பட வேண்டும். இந்தியாதான் எங்களுக்கு முதலில் உதவி செய்யும் நாடு. எனவே இந்தியாவின் கரத்தை  இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது. இந்தியப் பிரதமர் , தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகியோருக்கு இலங்கை மக்கள் சார்பாக  நன்றி கூறுகின்றேன்.  

எமது வன்னி மாவட்டத்தில் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள்,   பிரதேச சபை, நகரசபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், தொண்டர்கள் முப்படையினருக்கும்  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை அனர்த்தத்தால் மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தை   கவனத்திற்  கொள்ளுமாறு   அரசாங்கத்திடம்  கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள், கடற் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஒரு வீட்டுக்கு 25000 ரூபா கொடுக்கப்படுவதை அறிந்த மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் அந்தத்தொகையை  அதிகரிக்க வேண்டும்  எமது பிரதேச சபை, நகரசபைகளின் தவிசாளர்கள்  இயற்கை அனர்த்தம் தொடர்பில் முழு மூச்சாக செயற்படுகின்றார்கள் அவர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது 100 வீதம் ஒரு வேலையை  பூரணமாக செய்ய முடியாது. ஒரு சில குறைகள் இருக்கும். எனவே அரசாங்கத்தை  விமர்சிப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே குறைகளை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.  இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.

அரசாங்கத்துடன்  இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார்.  எல்லோரும் இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்கள்  என்ற ரீதியில் அரசாங்கத்துடன்  இணைந்து செயற்படுவோம். பாகுபாடுகள் வேண்டாம்.எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். நாம் அன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்த்து எமக்கு நேரம் தரவில்லை என்பதற்காக மட்டுமே. அரசாங்கத்துடன் எவ்வித  கோபமும் கிடையாது.அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41