(எம்.மனோசித்ரா)
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக சாலைத் தடைகள் ஏற்பட்டதினால், இலங்கை போக்குவரத்து சபையினால் இயக்கப்படும் சுமார் 1,500 பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் முன்னதாக ஆசனங்களை முன்பதிவு செய்திருந்ததாக இ.போ.ச. பேருந்துகளுக்கான ஆசன முன்பதிவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசன முன்பதிவு சேவையை கையாளும் நிறுவனம், ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள் தங்களுக்கு விருப்பமான வேறு எந்த திகதிக்கும் தங்கள் முன்பதிவுகளை மீளமைத்துக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.
மாற்றுத் திகதியை பெற்றுக்கொள்ள பயணிகள் 1315 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 070 3110 506 ஊடாகத் தொடர்பு கொள்ளலாம். மீளமைப்பிற்கு மேலதிக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது என்றும் இ.போ.ச. குறிப்பிட்டுள்ளது.
தற்போது, நுவரெலியா, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணத்திற்கான 87 ஆம் இலக்கப் பாதை, வலப்பனை, மூதூர் போன்ற இடங்களுக்கான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஏனைய இடங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பாதைகளுக்கான ஆசன முன்பதிவுகளும் மீண்டும் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM