முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம் - கயந்த கருணாதிலக

03 Dec, 2025 | 05:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.  பொதுமக்களின் பாதுகாக்க  முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு  நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான  கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடு மிக மோசமான  அனர்த்த நிலையை  எதிர்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான நிலை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும்,எமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதற்கும் அரசாங்கத்திடம் அனுமதி கோரினோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

அனர்த்தம் மற்றும் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இன்றும் (நேற்று) நாளையும்  (இன்றும்)  குழுநிலை விவாதத்தில் உரையாடுவோம்.இந்த அனர்த்த்தால் பலர் உயிரிழந்துள்ளார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள். இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.மீட்பு பணிகள்  தொடர்கின்றன. ஆகவே    ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.  பொதுமக்களின் பாதுகாக்க  முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள்.முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு  நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...

2026-07-12 09:32:01
news-image

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!

2026-07-12 09:31:27
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின்...

2026-07-12 09:23:04
news-image

நீதிபதிகளின் பதவி கால நீடிப்பு ;...

2026-07-12 09:21:52
news-image

புத்தல பகுதியில் கார் மரத்துடன் மோதி...

2026-07-12 09:18:09
news-image

லக்கல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு...

2026-07-12 08:39:11
news-image

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர்...

2026-07-12 08:33:59
news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37