அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் ; கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன - கவீந்திரன் கோடீஸ்வரன்

03 Dec, 2025 | 04:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாடு  தற்போது  எதிர்கொண்டுள்ள  இந்த இக்கட்டான நேரத்தில்  அரசாங்கத்தை   நெருக்கடிக்குள்ளாக்க  முயற்சிக்க கூடாது. கட்சி பேதங்கள் இன்றி நாட்டு மக்களுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதுடன்,பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம். தற்போதைய நெருக்கடியான  சூழலில் இருந்து மீள்வதற்கு  அனைவரும் ஒன்றிணைந்து

இந்த நேரத்தில் நாங்கள் அரசியல் பாகுபாடுகளை நிறுத்தி வைத்துவிட்டு, அரசியல் செய்வதை நிறுத்தி,ஆட்சியை பிடிப்பதற்கோ, வேறு சதித்திட்டங்களுக்கோ உடந்தையாக இருக்காமல் நாட்டு மக்களுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

ஒருவரையொருவர் குற்றம் கூறாமல் மக்களையும் பொருளாதாரத்தையும் எமது நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் அரச அதிகாரிகள் தங்களால் இயன்ற பணிகளை செய்கின்றனர். இவர்களுக்கு எமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான நெற்காணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். அதேபோன்று மலையகத்தில் அதிகளவில் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41
news-image

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

2025-12-05 17:14:05
news-image

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய...

2025-12-05 18:53:53
news-image

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா...

2025-12-05 18:25:33
news-image

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான...

2025-12-05 18:11:16
news-image

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு...

2025-12-05 17:37:48
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட...

2025-12-05 17:31:46
news-image

வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த...

2025-12-05 17:21:23
news-image

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள்...

2025-12-05 16:50:33
news-image

மலையக மார்க்கத்தில் 12 ரயில்கள் நிறுத்தி...

2025-12-05 16:42:50