கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்று புதன்கிழமை (03) பிற்பகல் 1.00 மணியளவில் நாட்டை வந்தடைந்தது.
இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கான பங்களாதேச உயர் ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் இந்த உதவிப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்ததோடு பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் மயூரி பெரேரா உள்ளிட்ட குழுவினர் உதவிப் பொருட்களைப் பொறுப்பேற்றனர்.
இந்தப் பொருட்களில் 1,000 நுளம்பு வலைகள், 500 உணவுப் பொதிகள், 10 கூடாரங்கள், 125 அவசர மருத்துவப் பெட்டிகள், பாதணி, கையுறைகள்,ஜெக்கட்டுகள், தலைக்கவசங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை அடங்கும்.
இந்த உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்பட உள்ளன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM