மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

03 Dec, 2025 | 04:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று  கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்    ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நெருக்கடியான சந்தர்ப்பத்தின் போது  நாட்டுக்கும்,  நாட்டு மக்களுக்கும் உதவி கரம் நீட்டிய உலக நாடுகளுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனர்த்தத்தின் போது எமது மக்கள் பிறருக்கு உதவி செய்துள்ளார்கள். நாம் நமக்கு என்ற கொள்கைக்கு அமைய  எம்மக்கள் செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இக்கட்டான நிலைமை விளங்கிக் கொண்டு மக்கள் செயற்படும் போது எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைப்பது வெறுக்கத்தக்கது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கும்  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அதிக இலாபமடைவதற்காக  அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை  விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சகல தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41