டித்வா புயல் பேரழிவு – இலங்கைக்கு வருகிறது 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு

Published By: Digital Desk 3

03 Dec, 2025 | 03:43 PM
image

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், இன்று அதிகாலை பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டது.

பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், கூட்டாட்சி அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி, பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் இனாம் ஹைதர் மாலிக்,

இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது பாகிஸ்தான் அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி கூறியதாவது:

“பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்,” என்றார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் ஃப்ரெட் செனவிரத்ன, பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கு அவர்களின் தகுந்த நேர உதவிக்காக நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷஹ்பாஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து 200 தொன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமரின் உத்தரவின் பேரில்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று 200 தொன் நிவாரணப் பொருட்களை கடல் மார்க்கமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. கூடுதலாக, கொழும்பு – லாகூர் விமான சேவையின் மூலம் கூடுதல் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களில், குடும்பங்களுக்கான தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், உயிர்காப்பு ஜாக்கெட்கள், காற்றேற்றக் கூடிய படகுகள், நீர் அகற்றும் பம்புகள், விளக்குகள், தரைப்பாய்கள், நுளம்பு வலைகள், குழந்தைகளுக்கான பால் மாக்கள், உடனடியாக உணவாக உட்கொள்ளக்கூடிய பொதியுணவுகள், முக்கிய மருந்துகள் அடங்குகின்றன.

மேலும், பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் ஏற்கனவே இலங்கையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதியின் சிறப்பு கோரிக்கையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணுகுமுறை மற்றும் பாலங்களின் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் இராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது.

“இலங்கையின் சகோதர மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம்; மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் உறுதியாக இருக்கும், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03
news-image

களுவாஞ்சிகுடி நகைக் கடையில் தங்கக் காப்பைத்...

2026-07-11 17:34:28