முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஆதிக்கம்

03 Dec, 2025 | 03:31 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் தடுமாறிய நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்டத்தை ஆதிக்கத்துடன் முடித்தது.

ஜேக்கப் டஃவி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததன் மூலமே இப் போட்டியில் நியூஸிலாந்தின் ஆதிக்கம் மேலோங்கியது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டெவன் கொன்வே 15 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் டொம் லெதம் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் பத்து விக்கெட்களும் மீதம் இருக்க 96 ஓட்டங்களால் நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை (03) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 231 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் கடைசி விக்கெட்டை இழந்தது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 167 ஓட்டங்களுக்கு சுருண்டது.

நியூஸிலாந்தைப் போன்றே மேற்கிந்தியத் தீவுகளும் வேகப்பந்துவீச்சிலேயே விக்கெட்களை இழந்தது.

ஜேக்கப் டஃபி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்தார்.

முதல் இரண்டு விக்கெட்கள் 10 ஓட்டங்களுக்குள் சரிந்ததைத் தொடர்ந்து டேஜ்நரின் சந்தர்போல்,  ஷாய் ஹோப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 100 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், கடைசி 8 விக்கெட்கள் வெறும் 67 ஓட்டங்களுக்கு சரிந்தன.

ஷாய் ஹோப் 56 ஓட்டங்களுடன் 3ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் வரிசையாய் வீழ்ந்தன. டேஜ்நரின் சந்தர்போல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட மத்திய வரிசையில் டவின் இம்லெக் (14), கெமர் ரோச் (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கங்களை எட்டினர். உதிரிகளாக 28 ஓட்டங்கள் கிடைத்தன.

பந்துவீச்சில் ஜேக்ப் டஃபி 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெட் ஹென்றி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸக் ஃபோக்ஸ் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12