யாழ். எழுவைதீவு மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் : ஹரிணி அமரசூரிய

03 Dec, 2025 | 03:56 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணம் எழுவைதீவு சரவணபவா வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற  அமர்வின் போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனால் யாழ்ப்பாணம் எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தின் மாணவர்கள் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு  தோற்றும் போது எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்  குறித்து கேள்வியெழுப்புகையில்,

எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தின் மாணவர்கள் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக பரீட்சை நிலையம் செல்வதற்காக பெரும் சிரமப்படுகின்றனர். ஊர்காவற்துறையில் தங்கியிருந்தே பரீட்சையை எழுதும் நிலைமை உள்ளது. இந்த மாணவர்களுக்காக விசேட படகு சேவைகளை ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தில் 1999இல் இருந்து பரீட்சை நிலையம் நடத்தப்படவில்லை. குறைந்தளவான மாணவர்கள் இருப்பதாலேயே அங்கு பரீட்சை நிலையத்தை அமைக்க முடியாதுள்ளது. தற்போது அந்த பாடசாலையின் சாதாரண தர மாணவர்கள் ஊர்காவற்துறையில் உள்ள சென். அந்தனி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலேயே பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்த பாடசாலையில் இருந்து 2023 இல் 8 பேரும்,  2024 இல் 5  பேரும்  பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதனால் இவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்குரிய போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

தலைமன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஷாம்பூ...

2026-07-14 12:12:37
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12