அனர்த்தம் தொடர்பில் காலநிலை அவதான நிலையம் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி இருந்ததா இல்லையா ; முஜிபுர் ரஹ்மான் கேள்வி

03 Dec, 2025 | 02:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படவில்லையா என அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அதனால் இதுதொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03) இடம்பெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு,  வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்  மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும்  உரையாற்றுகையில், 

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள், வளிமண்டலவியல் திணைக்களம் போன்ற அமைப்புகளால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

அதனால் உண்மையில் அரசாங்கம் இதனை அறிந்திருந்ததா இல்லையா?  அல்லது  அந்த அனர்த்தம் தொடர்பில் காலநிலை அவதான நிலையம் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி இருந்ததா இல்லையா என அரசாங்கம் இதுதொடர்பில் இதுவரை முறையான பதில் ஒன்றை வழங்கவில்லை. இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரான  ஜனாதிபதியின் நடவடிக்கைகளிலும், இந்த அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை.

இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது, அதனை  தடுப்பதற்கு யாருக்கும் முடியாது. ஆனால் முன்கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை முடியுமானவரை குறைத்துக்கொள்ள முடியும் என்றே தெரிவிக்கிறோம். அவ்வாறான திட்டம் அரசாங்கத்திடம் இருந்ததா? அவ்வாறான திட்டம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. 

அதனாலே இதுதொடர்பில் தேடிப்பார்க்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான ஒரு அனர்த்தம் தொடர்பில் காலநிலை அவதான நிலையம் அறிவித்ததா, இல்லையா அல்லது அதிகாரிகள் இது தொடர்பில் முன்கூட்டி அறிவுறுத்தியும் அரசாங்கம் செயற்படவில்லையா என தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, இந்த தவறு எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என முன்மொழிகிறேன்.

ஏனெனில் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு இதுதொடர்பான தகவல்கள் எங்களுக்கு அவசியமாகும். இடம்பெற்ற அனர்த்தத்தில் மரணித்தவர்களின், காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதளவுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் இவ்வாறான அனர்த்தம் ஏற்படும் என்ற தகவல் தெரிந்தும் அதுதொடர்பில் செயற்படாமல் இருந்தார்கள் யார்  அல்லது தகவல் வழங்காமல் இருந்தார்களா? இதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யார் என்ற விடயங்களை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டுக்கு மக்களுக்கு இருக்கிறது.

அதேபோன்று இதனை அறிந்துகொள்ளும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. அதனாலே இதுதொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 19:46:49
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41
news-image

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

2025-12-05 17:14:05
news-image

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய...

2025-12-05 19:43:24
news-image

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா...

2025-12-05 18:25:33
news-image

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான...

2025-12-05 18:11:16
news-image

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு...

2025-12-05 17:37:48
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட...

2025-12-05 17:31:46