செய்வதை சட்டத்தின் பிரகாரம் செய்யுங்கள் ; ஏனெனில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் பொறுப்புக் கூற வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

03 Dec, 2025 | 02:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு  திறைசேரியில் போதுமான  நிதி உள்ளது. நிதி பற்றாக்குறை ஏதும் கிடையாது. இலங்கையை  மீளக்கட்டியெழுப்பல்  நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரச பொது நிதிச் சட்டத்தின் 148  ஆவது பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொது நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது. செய்வதை சட்டத்தின் பிரகாரம் செய்யுங்கள், ஏனெனில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும்  பொறுப்புக் கூற வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை. ஆகவே அந்த நிதியை தற்போதைய அவசர நிலைக்கு பயன்படுத்த முடியும்.

சேதடைந்துள்ள வீடுகள் மற்றும் பாலங்களை புனரமைக்க 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 20 பில்லியன் ரூபாவை பிறிதொரு வழியில்  பெற்றுக்கொள்ளலாம்.  ஆகவே எதிர்வரும் 4 வாரத்துக்கு செலவு செய்வதற்கு போதுமான நிதி அரசாங்கத்திடம் உள்ளது.

நிதி விடுவிப்புக்கு தேவையான சுற்றறிக்கைகளை தயாரிப்பதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித தடையும் கிடையாது.  பாதிக்கப்பட்டுள்ள   வீடுகளை துப்பரவு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 50 ஆயிரம் ரூபாவேனும் வழங்க முடியும். 25 ஆயிரம் வழங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தொகை எந்தளவுக்கு போதுமானதாக அமையும். ஆகவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்க நிதி  நெருக்கடி ஏதும் கிடையாது.

2026 ஆம் ஆண்டு தான் நிதி நெருக்கடி ஏற்படும். நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய அரச செலவினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான நிலைமையை கருத்திற் கொண்டு  அரச செலவினத்தை 300 முதல் 500 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக் கொள்ளும் யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

இலங்கையை  மீளக்கட்டியெழுப்பல்  நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரச பொது நிதிச் சட்டத்தின் 148  ஆவது பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொது நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது.

செய்வதை சட்டத்தின் பிரகாரம் செய்யுங்கள்,ஏனெனில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும்  பொறுப்புக் கூற வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கும் மீட்பதற்கும் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து...

2026-09-16 15:43:09
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு...

2026-09-16 15:40:46
news-image

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து...

2026-09-16 15:43:27
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57