பேரிடர் மீட்பு – நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகருடன் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ கலந்துரையாடல்

03 Dec, 2025 | 02:39 PM
image

இலங்கைக்கான பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென், பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கலந்துரையாடல் குறித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரிட்டனின் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் இலங்கைக்கு தெரிவித்துக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாக தெரிவித்தேன்.

அவசரகால உதவிக்காக பிரிட்டன் அரசு அறிவித்துள்ள 675,000 பவுண்ட் ( £ ) நிதி ஒதுக்கீடு பற்றியும், நீண்ட கால மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான ஆதரவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினேன்.

டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் வலியுறுத்தினேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 08:54:58
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11