சட்ட விரோதமாக இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை கடந்த மாதம் 10 ஆம் திகதி விடுதலை செய்தது.

இந் நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த விடுவிக்கப்பட்ட 42 படகுகளை பார்வையிட தமிழக மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் குழு நாளை இலங்கைக்கு வரவுள்ளனர்.

இக் குழுவில் ராமநாதபுர மீனவ அமைப்பின் மேலதிக பணிப்பாளர் ஜி.எஸ் சமீரன், ராமேஷ்வர மீனவர்களின் பிரதிப் பணிப்பாளர் திரு மணிகண்டன், பம்பன் மீனவர்களின் இன்ஸ்பெக்டர், புதுக்கோட்டை ,ராமேஷ்வரம் ,நாகபட்டினம், பகுதி மீனவத் தலைவர்கள் மற்றும் இயந்திரப் படகு திருத்துநர் உட்பட 7 பேர் இடம்பெறுகின்றனர்.